திரு. சண்முகலிங்கம் சுரேந்திரன்

(ஒய்வு பெற்ற புகைப்படப்பிடிப்பாளர் - வீரகேசரி)

சண்முகலிங்கம் சுரேந்திரன்

தோற்றம்: 04 டிசம்பர் 1957 - மறைவு: 26 ஜூலை 2026

திருகோணமலை - சாம்பல்தீவைப் பிறப்பிடமாகவும் கொழும்பு - மட்டக்குளியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சண்முகலிங்கம் சுரேந்திரன் அவர்கள் 26-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகலிங்கம் - இராசரெட்ணம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற நடேசன் - சரோஜினி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

நந்தினி அவர்களின் பாசமிகு கணவரும்,

பாலமயூரன், சையொளிபவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மணிமேகலையின் அன்பு மாமனாரும்,

அபிநயா, அக்ஷ்ரா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

தியாகேந்திரன், ரவீந்திரன், காலஞ்சென்ற பாலேந்திரன், கமலேந்திரன், உமாஹரி, துஷேந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

ஜெயந்தினி, உதயகுமாரி, கௌரி, மோகன், தசோதா, மாலினி, சாந்தினி, தினேஷ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெயவினுதன், ஜெயகோபி, ஹம்சிதா, அபிகேஷன், ஹனுகாசினி, கிருத்திகாசன், டோனிகாசன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

தனுபவன், காலஞ்சென்ற பிரவீனா ஆகியோரின் அன்பு மாமனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் இல-08 நித்தியபுரி, மூன்றாம் கட்டை (Third Mile post), திருகோணமலையில் நடைபெற்று, திருவுடல் சாம்பல்தீவு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/07/2026 00:00)