Mr. Shanmugham Bakkiyarasa

Shanmugham Bakkiyarasa

Date of Birth: 08 December 1947 - Deceased: 19 May 2026

மட்டக்களப்பு - பெரியகல்லாறு 1ம் குறிச்சியைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை பேச்சியம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சண்முகம் பாக்கியராசா அவர்கள் 19-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் - இராசம்மா தம்பதியினரின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான சாம்பசிவம் - பத்மாவதி தம்பதியினரின் மருமகனும்,

காலஞ்சென்ற திலகவதி அவர்களின் ஆருயிர் கணவரும்,

ஜெயந்தி (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் - பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம், யாழ்ப்பாணம்), குருபரன் (கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் - யாழ்ப்பாணம்), சிவலோஜிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தவமணி, பரமேஸ்வரி, தவராசா (ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர்), தனலட்சுமி, தங்கராசா (ஓய்வு பெற்ற உதவி ஆணையாளர் - இலங்கை மதுவரித் திணைக்களம்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

ஸ்ரீகரன்ஜி (ஆசிரியர் - யாழ் - உயரப்புலம் மெ.மி.த.க.பாடசாலை), சயந்தன் (உரிமையாளர் - Iconic Builders, தென்றல் பல்பொருள் அங்காடி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அபிரஷன், நிர்ஷிகன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 21-05-2026 வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் கோம்பையன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

ஜெயந்தி (மகள்(:- +94 77 670 1039
குருபரன் (மகன்) +94 77 400 7227

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/05/2026 00:00)