Mr. Shanmughanathan Shakthikumaran
(Deputy Manager - Supplies Department - Peoples Bank)
Date of Birth: 27 September 1967 - Deceased: 12 May 2026
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், இல- 48B Harmer's Avenue, வெள்ளவத்தையை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. சண்முகநாதன் சக்திகுமாரன் அவர்கள் 12-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்
அன்னார் காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் - கமலாதேவி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை - தர்மகுலதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ஜீவராணி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜஸ்மின் சரண்யா (ஆசிரியை), ராகவி (வங்கி ஊழியர்), காருணியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சஜீவ்காந்த் (அயர்லாந்து) அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற சிவகுமார் (வங்கி முகாமையாளர் - மக்கள் வங்கி), சந்திரிக்கா, பவானந்தி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான கனகநாதன் (பரீட்சைத் திணைக்களம்), யோகநாதன் (சுங்கத் திணைக்களம்) மற்றும் சுரேஷ் (இலண்டன்), டெய்சிராணி, யமுனாராணி (நீர் வழங்கல் சபை), ரமேஷ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அருட்பிரகாசம் (பொறியியலாளர்), சிவநேசசிங்கம் (யுனிசெவ்) ஆகியோரின் சகலனும்,
ரேகா (இலண்டன்), கஸ்தூரி (ஆசிரியை) ஆகியோரின் உடன் பிறவா சகோதரனும்,
பிரசானந் (இலண்டன்), யுவகாந்த் (பிரான்ஸ்), சிந்துஜா (பொறியியலாளர்), காலஞ்சென்ற ரூபின்யா, லஹாரிண்யன் (வைத்தியர்), கிறிஸ்டின் (இலண்டன்), ஹரிஷா (இலண்டன்), ஷெரின் (இலண்டன்), ஏஞ்சலினா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சுபேந்தன் (தனியார் ஊழியர்), நிவோதிதன் (நெதர்லாந்து), சங்கமித்தா (டுபாய்) ஆகியோரின் சிறிய தந்தையும்,
டில்ஷான் (வங்கி ஊழியர்), சமிந்தன், அபிஷன், அருஷன் (ஜேர்மனி), றோஷன், ஏஞ்சலின்தானியா ஆகியோரின் பெரிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 13-05-2026 புதன்கிழமை அன்று இரவு 7.30 மணி முதல் அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 17-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2:00 மணியளவில் நல்லடக்க ஆராதனைகளின் பின்பு, சரீரம் கல்கிசை நிசல செவன பொது மையானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
