திரு. சண்முகநாதன் சேதுராஜா (கண்ணன்)

சண்முகநாதன் சேதுராஜா (கண்ணன்)

தோற்றம்: 24 ஜூன் 1965 - மறைவு: 30 டிசம்பர் 2025

யாழ்.மாதகல் கிழக்கை பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சண்முகநாதன் சேதுராஜா அவர்கள் 30-12-2025 அன்று வைகுந்த ஏகாதேசியன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், மாதகலைச் சேர்ந்த சேதுராஜா - வேதவல்லி தம்பதியினரின் புதல்வரும்.   

மூளாயைச் சேர்ந்த காலஞ்சென்ற தம்பி ராஜா - சிவகெங்கை [இலண்டன்] தம்பதியினரின் அன்பு மருமகனும்,

திருமகள் [பவானி-மலேசியா], இந்திரன் [சுரேந்தி-இலண்டன்] ஆகியோரின் அன்புச்சகோதரனும், 

நந்தினி [நாகபூஷானி] அவர்களின் அன்புக் கணவரும்,

 சியாமின் பாசமிகு தந்தையும்,

செந்தூரணின் மைத்துனரும் ஆவார்.

 அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 11-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 - 1:00 மணி வரை Harrow Leisure Centre, Byron Hall, Christ Church Avenue, Harrow HA3 5BF இல் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் Hendon Cemetery and Crematorium, Holders Hill Road, London NW7 1NB இல் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

இந்திரன் [சுரேந்தி]:- +44 739 759 2772
+44 757 265 0852

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/12/2025 00:00)