Mr. Shanmughanathan Veluppillai
Date of Birth: 26 September 1958 - Deceased: 19 September 2026
வவுனியா - கல்மடு புளியங்குளத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் - Middelfart யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சண்முகநாதன் வேலுப்பிள்ளை அவர்கள் 19-09-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் - அமராவதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
மாதகலைச் சேர்ந்த காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
நிசாந்தன், அபிசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வீணா, பாரதி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் (கந்தையா), சரஸ்வதி(இலங்கை), பாக்கியநாதன் (சுவிஸ்), காலஞ்சென்ற புஸ்பராணி (செல்லா, புளியங்குளம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உலகேஸ்வரி, காலஞ்சென்ற சண்முகம், மகேஸ்வரி, அருளானந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நதின் அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 25-09-2026 வௌ்ளிக்கிழமை அன்று காலை 9:00 - 12:00 மணி வரை Houkjær Begravelsescenter (Rosenkrantzvej 22, 8700 Horsens, Denmark) இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
