Mrs. Shanpagadevi Seevaratnam
Date of Birth: 09 July 1946 - Deceased: 21 July 2026
யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், இல.29, கொட்டாஞ்சேனை வீதி, கொழும்பு -13 யை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. சண்பகாதேவி சீவரட்ணம் அவர்கள் 21-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வேலணை மேற்கு தலைகாட்டி காலஞ்சென்ற திரு.சு. வைத்தியலிங்கம் (ஆங்கில ஆசிரியர்) - விசாலாட்சி தம்பதியினரின் அன்பு மகளும்,
அராலி தெற்கு சீவரட்ணத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற கங்கைவேணி (மாநகர சபை உறுப்பினர்), கலைவாணி ஆகியோரின் அருமை சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-07-2026 வியாழக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மதியம் 1.00 மணியளவில் ஈமக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
கலைவாணி (சகோதரி):- +94 76 562 5547
www.tamilthakaval.org
