திருமதி. சாந்தினி திருவாதவூரன்

சாந்தினி திருவாதவூரன்

மறைவு: 09 ஆகஸ்ட் 2024

யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், வௌ்ளவத்தை, சுன்னாகம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சாந்தினி திருவாதவூரன் அவர்கள் 09-08-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகரத்தினம் (அதிபர்)-இராஜலக்சுமி தம்பதியினரின் செல்வப் புதல்வியும்,

காலஞ்சென்ற மார்க்கண்டு (அதிபர்)-தவமணி (ஐக்கிய இராச்சியம்) தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,

திருவாதவூரன் (சட்டத்தரணி, கணக்காளர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

கனிஸ்கா (ஐக்கிய இராச்சியம்), சங்கராத்மஜன் (ஐக்கிய இராச்சியம்) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

கௌரிகரன் (ஐக்கிய இராச்சியம்) அவர்களின் அன்பு மாமியாரும்,

றியா, றிஷான் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சிவநேசன் (தீனதயாளன்-அவுஸ்திரேலியா), பக்தவத்சலா (ஐக்கிய இராச்சியம்), ஆலாலசுந்தரன் (ஐக்கிய இராச்சியம்), கௌரிகரன் (ஐக்கிய இராச்சியம்) ஆகியோரின் அருமை மைத்துனியும்,

லிங்கேஸ்வரன் (ஐக்கிய இராச்சியம்) உடன் பிறவா சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் சுன்னாகத்தில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் 18-08-2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் நடைபெற்று, புகழுடல் கொத்தியாலடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

முகவரி:-

210, கே.கே.எஸ் வீதி, 

சுன்னாகம் வடக்கு, சுன்னாகம்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/08/2024 04:00)