திருமதி. செராணி நடராஜா
(ஓய்வுபெற்ற ஆசிரியை - பொகவந்தலாவ சென் மேரிஸ் கல்லூரி)
தோற்றம்: 02 செப்டம்பர் 1974 - மறைவு: 14 மே 2026
இந்தியா - திருச்சி மாவட்டம் திருமன்னூர் கிராமம் மாத்துடையான் கோத்திரம், நுவரெலியா - நோர்வூடினை வசிப்பிடமாக கொண்ட திருமதி. க. செராணி நடராஜா அவர்கள் 14-05-2026 வியாழக்கிழமை அன்று அதிகாலை 2.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நோர்வூட் கந்தசாமி பிள்ளை - விசாலாட்சி அம்மாள் தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான ராகலை சொக்கலிங்கம் பிள்ளை - செல்லம்மாள் தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற S. நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
ரினோஷின் அன்பு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான அருணகிரி (Arunagiri Stores), யமுனா மற்றும் சதாசிவம் (இந்தியா), தேன்மொழி ஆகியோரின் சகோதரியும்,
விஜயகுமார் (இந்தியா), கணேஷ்ராஜா (Ganapathy Stores), காலஞ்சென்றவர்களான சண்முகம் (இந்தியா), ஜெயகுமார் (Ganapathy Stores), மகாலிங்கம் (Sri Balakrishnan Stores Ragala) மற்றும் சசிகலா பிரபாகரன் (Indian Medical, Hatton), சுசிலா (நோர்வூட்) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-05-2026 வியாழக்கிழமை மாலை 5: 00 மணி முதல NKS Fancy, 180, Main Street, Norwood இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 15-05-2026 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் நோர்வூட் பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 384 1592
www.tamilthakaval.org
