திருமதி. சிரோன்மணி செல்வராஜா
தோற்றம்: 21 பெப்ரவரி 1952 - மறைவு: 30 ஏப்ரல் 2024
கொழும்பு-07, ரொறிங்டனைச் சேர்ந்த திருமதி. சிரோன்மணி செல்வராஜா அவர்கள் 30-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னாரின் புகழுடல் 01-05-2024 புதன்கிழமை அன்று காலை 9.30 மணி முதல் இரவு 10.00 மணி வரையும், 02-05-2024 வியாழக்கிழமை அன்று காலை 9.30 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரையும் புஞ்சி பொரளை லங்கா மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, Church of Good Shepherd (Jawatta Road, Colombo-05) இல் நல்லடக்க ஆராதனை நடைபெற்று, மதியம் 1.00 மணியளவில் R.C Borlla General Cemetery இல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
