Mrs. Shobana Dineskumar

(முகாமைத்துவ உதவியாளர்)

Shobana Dineskumar

Date of Birth: 01 December 1989 - Deceased: 06 June 2026

யாழ். சாவகச்சேரி, மீசாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சோபனா டினேஷ்குமார் அவர்கள் 06-06-2026 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், சண்முகலிங்கம் - யோகராஜமலர் தம்பதியினரின் அன்பு மகளும், சதாசிவமூர்த்தி - கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

டினேஷ்குமார் அவர்களின் (பொறியியலாளர் - தெகிவளை/ கல்கிசை, மாநகரசபை) பாசம் நிறைந்த துணைவியும்,

பிரணவ், ஆரத்யா ஆகியோரின் உயிர் கலந்த அன்னையும்,

தீபா (பிரான்ஸ்), கபிலன் (இலண்டன்), ரூபா (இலண்டன்), நிஷாந்தி (இலண்டன்) ஆகியோரின் சகோதரியும்,

குமுதினி (சிட்னி), குணாளினி (இலண்டன்), நந்தீசன் (கொழும்பு), உதயணன் (சிட்னி), பகீரதன் (பிரான்ஸ்), பத்மறாஜி, கேதீஸ்வரநாதன், ஐங்கரன் (இலண்டன்) ஆகியோரின் அன்புள்ள மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலை 09:00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/06/2026 00:00)