திரு. சிங்கராசா முருகையா

(இளைப்பாறிய லிகிதர் இலங்கை துறைமுக அதிகார சபை)

சிங்கராசா முருகையா

தோற்றம்: 19 ஜனவரி 1946 - மறைவு: 08 டிசம்பர் 2023

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும், திருகோணமலை, சமாது லேனை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிங்கராசா முருகையா அவர்கள் 08-12-2023 இன்று வெள்ளிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சிங்கராசா, தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு புதல்வனும்,
 
ஞானம்மாவின் பாசமிகு கணவரும்,
 
சிவஈஸ்வரராசா (சிவா- யாழ் சந்தை உரிமையாளர், கனடா), சிவனேஸ்வரராசா (நீர்ப்பாசன திணைக்கள அதிகாரி-திருகோணமலை), பிரதீஸ்வரன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையாரும், 
 
காலஞ்சென்ற ஆறுமுகதாஸ், பரமேஸ்வரி (கொக்குவில்-யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற கோணலிங்கம், ஈஸ்வரி (திருகோணமலை) ஆகியோரின் அன்பு சகோதரனும், 
 
மலர்மகள் (கனடா), சந்திரகலா (ஆசிரியை-திருகோணமலை), திவ்வியா (கனடா) ஆகியோரின் மாமனாரும்,
 
சஞ்ஜீ (கனடா), ஜனகன் (கனடா), கஜன், சேஷையன், பிருத்திகா (கனடா), லினுஷா(கனடா) ஆகியோரின் நேசமிகு பேரனாருமாவார்.
 
அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்!
 
தகவல்:- பிள்ளைகள்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/12/2023 01:42)