Mrs. Sinharaja Yasodaradevi
Date of Birth: 15 March 1951 - Deceased: 13 April 2023
இல 122,கண்டிவீதி யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிங்கராஜா யசோதராதேவி(யசோ) அவர்கள் நேற்று 13-04-2023ம் திகதி வியாழக்கிழமை இறைவனடி எய்தினார்.
அன்னார் கந்தையா அன்னம்மா தம்பதியரின் பாசமிகு மகளும்,
சுப்பிரமணியம் இராசம்மா தம்பதியரின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சிங்கராஜா (துரை) அவர்களின் பாசமிகு மனைவியும்,
மயூரன் (மாவட்ட நீதிமன்றம், கிளிநொச்சி), மயூரதி (அபிவிருத்தி உத்தியோகத்தர், கச்சேரி), மாதுளன் (LOLC கிளை பிராந்திய முகாமையாளர், நெல்லியடி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கேதீஸ்வரன் (தொழில்நுட்ப உத்தியோகத்தர், பூகி இன்ஜினியரிங்), சஞ்சீவா, அனுஷா (முன்பள்ளி ஆசிரியர்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அவினாஷ், விஸ்மிகன், சுபீட்சா, புகழினி ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும்,
குணமணி, காலஞ்சென்றவர்களான சோதிமதி, ரட்னேஸ்வரி, சற்குணேஸ்வரி மற்றும் தனலட்சுமி,ருக்குமணி, பாலசுப்பிரமணியம், சேகர் (லண்டன்), மஞ்சு (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம், காத்தலிங்கம், நடராசா, மகாலிங்கம், மரியராசா மற்றும் ஞானேஸ்வரி, மனோன்மணி, மோகனசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 14-04-2023ம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக அரியாலை சித்துபாத்தி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/04/2023 13:42)
