திரு சின்னையா தில்லைநாதன்
(ஓய்வுபெற்ற வௌிநாட்டு தூதரக அதிகாரி)
தோற்றம்: 13 டிசம்பர் 1943 - மறைவு: 19 ஜனவரி 2024
யாழ். துன்னாலை வல்லியானந்தப் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னையா தில்லைநாதன் அவர்கள் 19-01-2024 வௌ்ளிக்கிழமை அன்று அதிகாலை இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா - இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான நடராசா - மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராஜராஜேஸ்வரி அவர்களின் ஆருயிர் கணவரும்,
காலஞ்சென்ற வானதி மற்றும் சுஜிதா, தயாளன், அகிலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஏழ் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவானந்தம், செல்லமணி, சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் மகிந்த மலர்ச்சாலையில் 20-01-2024 சனிக்கிழமை காலை 9.00 முதல் மணிக்கு பார்வைக்கு வைக்கப்பட்டு 21-01-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று மாலை 5.00 மணியளவில் தகனத்திற்காக கல்கிசை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
