திரு. சின்னையா தற்பரசுந்தரம்

(முன்னாள் சிற்றிசன் சென்டர் - உரிமையாளர்)

சின்னையா தற்பரசுந்தரம்

தோற்றம்: 02 மே 1946 - மறைவு: 11 செப்டம்பர் 2025

முல்லைத்தீவு - வற்றாப்பளை முள்ளகயவளையினைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னையா தற்பரசுந்தரம் அவர்கள் 11-09-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சின்னையா - சிவகாமிபிள்ளை தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் - புஷ்பவதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பத்மாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

நிரோஜன் (அபிவிருத்தி உத்தியோகத்தர் - தொழில்துறை திணைக்களம், மாவட்ட செயலகம், முல்லைத்தீவு), நிரோஜிகா (பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் - பிரதி விவசாய பணிப்பாளர் பணிமணை, முல்லைத்தீவு), நிசாந்தன் (கண்ணகி ஹாட்வெயார் - வவுனியா), நிதர்சன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

நிவேதினி (ஆசிரியை - வித்தியானந்தா கல்லூரி), மௌழிசன் (ஆசிரியர் - கலைமகள் வித்தியாலயம், முள்ளயவளை), கவிதா, சாரியா (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இராசம்மா, துரைசிங்கம் மற்றும் சந்திரசேகரம் (ஓய்வுபெற்ற கூட்டுறவு ஆணையாளர் - வடக்கு கிழக்கு மாகாணம்), சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அஜேந்தன், சர்வின், அபிசயன், தருணியன், அட்சிதா, ஆதிதன், ஆதுரியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின இறுதிக்கிரியைகள் 12-09-2025 வெள்ளிக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2:30 மணியளவில் திருவுடல் வற்றாப்பளை இந்து  மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/09/2025 04:00)