Mr. Sinnaiya Thatparasuntharam
(முன்னாள் சிற்றிசன் சென்டர் - உரிமையாளர்)
Date of Birth: 02 May 1946 - Deceased: 11 September 2025
முல்லைத்தீவு - வற்றாப்பளை முள்ளகயவளையினைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னையா தற்பரசுந்தரம் அவர்கள் 11-09-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சின்னையா - சிவகாமிபிள்ளை தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் - புஷ்பவதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பத்மாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
நிரோஜன் (அபிவிருத்தி உத்தியோகத்தர் - தொழில்துறை திணைக்களம், மாவட்ட செயலகம், முல்லைத்தீவு), நிரோஜிகா (பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் - பிரதி விவசாய பணிப்பாளர் பணிமணை, முல்லைத்தீவு), நிசாந்தன் (கண்ணகி ஹாட்வெயார் - வவுனியா), நிதர்சன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
நிவேதினி (ஆசிரியை - வித்தியானந்தா கல்லூரி), மௌழிசன் (ஆசிரியர் - கலைமகள் வித்தியாலயம், முள்ளயவளை), கவிதா, சாரியா (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, துரைசிங்கம் மற்றும் சந்திரசேகரம் (ஓய்வுபெற்ற கூட்டுறவு ஆணையாளர் - வடக்கு கிழக்கு மாகாணம்), சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அஜேந்தன், சர்வின், அபிசயன், தருணியன், அட்சிதா, ஆதிதன், ஆதுரியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின இறுதிக்கிரியைகள் 12-09-2025 வெள்ளிக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2:30 மணியளவில் திருவுடல் வற்றாப்பளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
