திரு. சின்னையா தில்லைநாதன் (கந்தராசா)
மறைவு: 01 மே 2025
யாழ். சாவகச்சேரி கோயிற்குடியிருப்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னையா தில்லைநாதன் அவர்கள் 01-05-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான எழுதுமட்டுவாழைச் சேர்ந்த பூபாலசிங்கம் - தங்கரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
தவமணி (தவம்) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம் - கனகம்மா (பொன்னார்) வின் அன்புத் தம்பியும்,
திலீபன் (கனடா), மைதிலி (சுவிஸ்), காண்டீபன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தவக்குமார் (சுவிஸ்), தயாளினி (கனடா), கிருஷாந்தி (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சகான், சகானா, மிதுலன், மிருஜா, கர்ணி, ஹம்ஸி ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-05-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
