Mr. Sinnaiya Yogeswaran

Sinnaiya Yogeswaran

Date of Birth: 19 September 1949 - Deceased: 18 March 2024

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், அரியாலை புறூடி லேன், கொழும்பு வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சி. யோகீஸ்வரன் அவர்கள் 18-03-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பஞ்சாட்சரம் சின்னையா - இராஜலட்சுமி தம்பதியினரின் மூத்த புதல்வரும்,

இந்துமதி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான நகுலாம்பிகை, வடிவாம்பிகை, அருள்ஞானச் செல்வன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கீர்த்திகா, ரம்யாதேவிப்பிரியா, காந்தீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வாகீசன் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 21-03-2024 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல்  கல்சிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிற்பகல் 2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.30 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் புதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/03/2024 04:00)