Mr. Sinnakuddy Selvanayagam

(Retired Principal)

Sinnakuddy Selvanayagam

Date of Birth: 20 July 1937 - Deceased: 30 June 2022

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும் அம்பனை மற்றும் கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னக்குட்டி செல்வநாயகம் அவர்கள் 30-06-2022 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு சின்னக்குட்டி சின்னக்குட்டி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை பொன்னு தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுதாமதி (ஓய்வுபெற்ற ஆசிரியை- இலங்கை) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

கணேசானந்தன் (பொறியியலாளர்- கனடா), மதிவதனி (வைத்தியர்- கொழும்பு தேசிய வைத்தியசாலை), குகநாதன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நாகரத்தினம் (கனடா), குணரத்தினம் (யாழ்ப்பாணம்), சிவதர்ஷினி (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், விஜயரத்தினம் மற்றும் மனோன்மணி (கனடா), லோகேஸ்வரன் (கனடா), நவரத்தினம் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

திவ்வியா கங்கேஸ்வரன் (அவுஸ்ரேலியா), பராபரன் ராதாகிருஷ்ணன் (கனடா) ஆகியோரின் பாசமிகு சீனியப்பாவும்,

காலஞ்சென்ற சரஸ்வதி, சுலோச்சனா தேவி மற்றும் சபாரத்தினம் (கனடா), இராசேஸ்வரி (கனடா), கமலராணி (கனடா) ஆகியோரின் மைத்துனரும்,

சேயோன் (கனடா), கயல் (கனடா), செல்வநீதன் மற்றும் நவநீதன் (கொழும்பு இந்து கல்லூரி மாணவர்கள்) ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 01-07-2022 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை Mahinda Funeral and Florists. 591, Galle Rd Mount Lavinia, 10370, Sri Lanka எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் தகனக்கிரியை நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/07/2022 11:18)