திரு. சின்னப்பு பாலசிங்கம்

சின்னப்பு பாலசிங்கம்

தோற்றம்: 09 ஜூன் 1948 - மறைவு: 16 செப்டம்பர் 2022

யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வதிவிடமாகவும் கொண்ட சின்னப்பு பாலசிங்கம் அவர்கள் 16-09-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம், மனோன்மணி (தாவடி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சகுந்தலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சர்மிளா (கனடா), சரண்யா (கனடா), சுஜீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ராஜ்குமார் (கனடா), பிரதீபன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், யோகலிங்கம், கனகலிங்கம், துரைராஜா மற்றும் துரைசிங்கம், ஜெயராயா, கமலாதேவி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நாகம்மா, கனகமலர் (இந்தியா), பார்வதி, புஸ்பமலர், காலஞ்சென்றவர்களான சகுந்தலா (வல்வெட்டி), காஞ்சனாதேவி, கனகசபை (ராசு- வல்வெட்டி) மற்றும் துரைசிங்கம் (ஜேர்மனி), கோணேஸ்வரன் (கனடா) அனுஷாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

புலேந்திரராஜா அவர்களின் அன்புச் சகலனும்,

அஜந், ரீனா, அஜய், அஸ்னா, அரிஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-09-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-

இல. 31/10 சங்கிலியன் வீதி,
நல்லூர், யாழ்ப்பாணம்.
 
தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/09/2022 03:03)