திரு. சின்னப்பு யோகேந்திரம்

சின்னப்பு யோகேந்திரம்

மறைவு: 18 ஜூன் 2024

யாழ். புன்னாலைக்கட்டுவனை பிறப்பிடமாகவும், Herne - ஜேர்மனியை வசிப்பிடமாகவும், கொண்ட திரு. சின்னப்பு யோகேந்திரம் அவர்கள் 18-06-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னப்பு-நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

ராசாத்தி அவர்களின் பாசமிகு கணவரும்,

உருத்திரன் (ஜேர்மனி), வனிதா (ஜேர்மனி), வராகினி (பிரித்தானியா), மதுரா (பிரித்தானியா), செல்வராஜா (இலங்கை), காலஞ்சென்ற வினோதினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குகானந்தி (ஜேர்மனி), கருணாநிதி (இலங்கை), சிவநேசன் (ஜேர்மனி), பிரகலாதன் (பிரித்தானியா), மயூரதன் (பிரித்தானியா), புரந்திரன் (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமனும்,

அபிநயன், அச்சுதன், சுஜீபன், அஸ்விகா, ராகுலன், கோபிகா, கோகிலன், அபினேகா, நிகேதன், சயன், மதுஸ், அனுஷ்கன், அக்சரா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், சிவஞானம், பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரனும்,

பொன்மலர், விநாயகம்பிள்ளை, பகீரதன் (கோக்ரர்), கஜானன் (ரொனி) ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 24-06-2024 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10.00 மணி தொடக்கம் மதியம் 1.00 மணி வரை பார்வைக்காக Straßburger Str. 3, 44623 Herne, Deutschland என்ற முகவரியில் வைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/06/2024 04:00)