திரு. சின்னசாமிப்பிள்ளை துரைசாமிப்பிள்ளை

(லிந்துலை நாகசேனை புனிதா கபே - உரிமையாளர்)

சின்னசாமிப்பிள்ளை துரைசாமிப்பிள்ளை

மறைவு: 23 நவம்பர் 2024

இந்தியா- திருச்சி மாவட்டம் தாத்தயன்கார்பேட்டையை பூர்வீகமாக கொண்ட திரு. சின்னச்சாமிப்பிள்ளை துரைசாமிப்பிள்ளை அவர்கள் 23-11-2024 சனிக்கிழமை அன்று அதிகாலை 4:00 மணியளவில் வெள்ளவத்தையில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னச்சாமிப்பிள்ளை-பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான குளித்தலை லால்பேட்டை பெரியசாமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் பாசமிகு கணவரும்,

ரமேஷ் (சப்னம்ஸ்), பவானி, பாரதி, தாரணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கனகராஜா (சப்னம்ஸ்), கண்ணபிரான் (விநாயகர் ஸ்டோர்ஸ்-பூண்டுலோயா), மேனகா, நிஷாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கவின், பிரவின், சுஜின், அக்ஷயா, கிரிசோன், பிரத்தன், நேகா, டிரவின், ஹரின் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் இல-9A, வவர்சட் பிளேஸ், வெள்ளவத்தை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 24-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் இறுதிகிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 வ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

 ன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/11/2024 05:00)