திரு. சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை
(Orient Trading Company - Colombo-04)
தோற்றம்: 09 டிசம்பர் 1943 - மறைவு: 21 ஜனவரி 2025
அம்பாறை - கல்முனையைப் பிறப்பிடமாகவும், இல-37, ஷெரபரி கார்டின், கொழும்பு-04 யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை அவர்கள் 21-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - சந்தனப்பிள்ளை தம்பதியினரின் ஏக புத்திரனும், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை (Co - Oprative Inspector) - சீதேவிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
தர்ஷிகா, பிரதீப் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு தந்தையும்,
காலஞ்சென்ற விஜயாலயன், ரதினி (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெய் கிருஷ்ணா (அவுஸ்திரேலியா), ஜெய் ரமணன் (IIT - கொழும்பு), அஞ்சனா (ஐக்கிய அமெரிக்கா), ரியானா (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 22-01-2025, 23-01-2025 ஆகிய தினங்களில் அன்னாரது பம்பலபிட்டி இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 23-01-2025 வியாழக்கிழமை 4:00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
