Mr. Sinnathambi Nadarasa
Date of Birth: 31 March 1939 - Deceased: 02 August 2025
யாழ். வல்வெட்டி சீனட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் - Luzern யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி நடராசா அவர்கள் 02-08-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரியாரியார் சின்னத்தம்பி - செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் - வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
புனிதவதி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சிவகுரு, சதாசிவம், நல்லம்மா, நல்லையா, வைத்தியநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புனிதராஜா, அமுதராணி, உபேந்திரன், பரணிதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யசோ, தர்மராஜா, சுமதி, அருள்மதி ஆகியோரின் அன்பு மாமாவும்,
திலகவதி, சுந்தரலிங்கம், சரஸ்வதி, ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சகிஷா, சுஜன், அருண், அபி, தனுஷ் காந்த், ஜதுஷிகா, மதுஷா, மிதுசன், தாட்சாயினி, காலஞ்சென்ற சதீஷ்காந்த் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04-08-2025 திங்கள், 05-08-2025 செவ்வாய், 06-08-2025 புதன்கிழமை தினங்களில் பிற்பகல் 3:00 - 7:00 மணி வரை Parkplatz Friedhof Friedental (Stadt Luzern Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 07-08-2025 வியாழக்கிழமை அன்று காலை 8:00 - 1:00 மணி வரை Krematorium (Krematorium Friedental | Stadt Luzern) Ibachstrasse 2, 6004 Luzern, Switzerland) இறுதிக்கிரியைகள் நடைபெற்று, உடலம் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
