திரு. சின்னத்தம்பி நாகேஸ்வரராஜா

சின்னத்தம்பி நாகேஸ்வரராஜா

தோற்றம்: 29 ஆகஸ்ட் 1928 - மறைவு: 25 ஜூலை 2025

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி நாகேஸ்வரராஜா அவர்கள் 25-07-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி - மீனாட்சிசுந்தரம் தம்பதியினரின் அன்பு கடைசி மகனும், காலஞ்சென்ற காத்தாமுத்து - நாகரத்தினம் தம்பதியினரின் அன்பு மூத்த மருமகனும்,

லீலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான தங்கராசா, அழகேஸ்வரராஜா, புவனேஸ்வரராஜா ஆகியோரின் அன்பு சகோதரனும்,

ராஜ்குமார் (கனடா), ரஞ்சினி (இலண்டன்), ராஜினி (டுபாய்) ஆகியோரின் அன்பு தந்தையாரும்,

பவானி (கனடா), சாந்தகுமார் (பாபு - இலண்டன்), செல்வகுமார் (டுபாய்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தீபன் (கனடா), ஜனதன் (கனடா), மேனன் (இலண்டன்), சங்கவி (அவுஸ்திரேலியா), சயந்தன் (கனடா) ஆகியோரின் அன்பு பேரனும்,

ஆரியாவின் அன்பு கொள்ளுப்பேரனும்,

பத்மாவதி (கனடா), காலஞ்சென்ற மோகனதாஸ், கமலாவதி (இலண்டன்), காலஞ்சென்ற ரஞ்சனதாஸ், பிரேமதாஸ் (இலண்டன்), திலகவதி (இலண்டன்), ரவீந்திரதாஸ் (இலண்டன்), காலஞ்சென்ற ஜீவதாஸ், ஞானவதி (நியூ யோர்க்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான துரைராசா, கந்தசாமி, ஜெகநாதன் மற்றும் ஹரீந்திரன் (நியூ யோர்க்) ஆகியோரின் அன்பு சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 30-07-2025 புதன்கிழமை  மாலை 5:00 - 7:00 மணி வரை Shanthi Funeral Service (184 Pinner Road, HA1 4JP) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 31-07-2025 வியாழக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் North Chapel (Hendon Cemetry and Crematorium, Holders Hill Road, NW7 1NB) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் உடலம் South chapel (Hendon Cemetry and Crematorium,Holders Hill Road, NW7 1NB) இல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/07/2025 04:00)