Miss. Sinnathambi Pakkiyalatcumi
Deceased: 29 November 2024
யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. சின்னத்தம்பி பாக்கியலட்சுமி அவர்கள் 29-11-2024 வௌ்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி-தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,
ராஜலட்சுமி, காலஞ்சென்றவர்களான ரகுநாதன், விஜயலட்சுமி மற்றும் சத்தியநாதன், பரமானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற செல்வநாயகம், அம்புலிதேவி, ஒப்பிலாமணி, சரோஜினி, கௌரி ஆகியோரின் மைத்துனியும்,
டேவிட் சுதாகர், திவாகரன், சசிகரன், சுஜிதா ஆகியோரின் சிறிய தாயாரும்,
அரவிந்தன், பிரமிளா, பிரவீனா, நிவேதன், நிவேதிகா, ஷீபா, சாம்சன் ஆகியோரின் அன்பு அத்தையும்,
யாதுரி, யாக்னவி, அபிநயா, சரண், அக்ஷரன், மானஷி, சர்வீகா, டக்ஷயன், விகாஷினி, விதுரன், வர்சாஜினி, ரிஷிகேசன், வர்ஷிகன், திவ்யன், கிருத்திகா, லியா, லிதியா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை அன்னாரின் இல்லத்தில் 10-12-2024 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் நடைபெற்று, புகழுடல் வேரூண்டை கட்டைவேலி மெதடி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
