Mr. Sinnathambi Paranjsothy

(சோதி ஸ்ரூடியோ - உரிமையாளர், மல்லாகம், தெல்லிப்பளை, குப்பிளான்)

Sinnathambi Paranjsothy

Date of Birth: 05 June 1963 - Deceased: 12 December 2024

யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி பரஞ்சோதி அவர்கள் 12-12-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - கண்மணி தம்பதியினரின்  அன்பு மகனும்,

காலஞ்சென்ற தருமலிங்கம் - பொன்மணி தம்பதியினரின் மருமகனும்,

கருணாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சுயந்தன் (சோதி ஸ்ரூடியோ), சுகிதா, தர்சிகா (விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் - யா / புனித தெரேசாள் மகளிர் கல்லூரி, அச்சுவேலி), அனிதா (ஆசிரியை - யா / திருக்குடும்ப கன்னியர்மடம் தேசிய பாடசாலை), காலஞ்சென்ற நிரோஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

டினேகா, தயாபரன் (களஞ்சியகாப்பாளர் - கார்கில்ஸ் நிறுவனம், கிளிநொச்சி), விஜயானந்தம் (பிரான்ஸ்), சாரங்கன் (மின்சாரசபை  தொழில்நுட்ப உதவியாளர் - சுன்னாகம்) ஆகியோரின் மாமனாரும்,

தனுசியன், யஸ்மிகா, ஹரிஸ்மன், ஆருசி, அதிசா ஆகியோரின் பேரனும்  ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-12-2024  வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் உசத்தியோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/12/2024 05:00)