Mr. Sinnathambi Rajabharathy

Sinnathambi Rajabharathy

Deceased: 27 September 2025

யாழ். மட்டுவில் தெற்கு பாரதி பவனத்தைப் பிறப்பிடமாகவும், இல- 04, பென்ரிக்கோஸ்ரல் ஒழுங்கை, கண்டி வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி இராஜபாராதி அவர்கள் 27-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - புவனேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மகனும், 

காலஞ்சென்ற மாணிக்கம் சுந்தரம் - சிவபாக்கியம் தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

அகல்யா (ஆசிரிய ஆலோசகர் - யாழ்.கல்வி வலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,

ஆதிரா (மாணவி - யாழ். புனித ஜோண் பொஸ்கோ வித்தியாலயம்) அவர்களின் அன்புத் தந்தையும்,

புவனபாரதி (பொறியியலாளர்-கனடா), கலாபாரதி (ஒய்வுநிலை ஆசிரியை), சுந்தரபாரதி (கணக்காளர்), முரளிபாரதி (கணிய அளவீட்டாளர்), சிவசுந்தரபாரதி (தாதியர் - இலண்டன்), விஜயபாரதி (கணக்காளர் - கொழும்பு), ஜெயபாரதி (Sai barght IT உரிமையாளர், கொழும்பு) ஆகியோரின் அன்புச்சகோதரனும்,

மதியழகன் (கணக்காளர்-கனடா), செல்வராசா (மட்டுவில்), தேன்மொழி (பேராசிரியர் - ரஜரட்டை பல்கலைக்கழகம்), மதுரா (சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளர் - யாழ் பல்கலைக் கரகம்), நீதிராஜா (இலண்டன்), ஹீகுகன் (கொழும்பு), பிரகலா (அபிவிருத்தி உத்தியோகத்தர்- பருத்திதுறை) ஆகியோரின் மைத்துனரும்,

சுதந்தி (ஆசிரியை- கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயம்), சுஜித்தா (ஜேர்மனி), துஷ்யந்தி (சித்த மருத்துவர்-மருதங்கேணி), கெளதமி (ஆசிரியை- கொழும்புத் துறை இந்து மகா வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ரட்ணேஸ்வர்ன் (விரிவுரையாளர்- யாழ். கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரி), மதன்மோகன் (ஜேர்மனி), செல்வராசா (ஆசிரியர் -யாழ். முத்துத்தம்பி மகா வித்தியாலயம்), ரவிக்குமார் ஜோசப் ஆகியோரின் அன்புக்குரிய சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-10-2025 புதன்கிழமை காலை 07.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, காலை 09.00 மணியளவில் திருவுடல் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/10/2025 04:00)