சிவத்திரு. சின்னத்தம்பி சுப்பிரமணியம்

(கப்பல் பொருள்வழிமுறை உத்தியோகத்தர், AMALIA II, Greece, மேலாளர்-யாழ் சண்முகநாதன் பதிப்பகம், ஓய்வுநிலை யாழ் இந்துக் கல்லூரி உத்தியோகத்தர்)

சின்னத்தம்பி சுப்பிரமணியம்

தோற்றம்: 09 ஆகஸ்ட் 1942 - மறைவு: 27 ஜூன் 2024

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், திருமகள் வீதி, அரியாலை, கொழும்பு கொட்டாஞ்சேனை, சொய்சாபுர மற்றும் கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி சுப்பிரமணியம் அவர்கள் 27-06-2024 வியாழக்கிழமை அன்று கனடாவில் சிவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி-வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற திருமதி. தங்கம்மா (லக்‌ஷ்மி) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பசுபதி, பார்வதி, கண்மணி, நாகம்மா மற்றும் கணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற செல்வி. திலகராணி ,திரு. தயாபரன் (கண்ணன்- கனடா, உயர்தரம் 1991ம் அணி யாழ்.இந்துக் கல்லூரி, Bell Canada), கலாநிதி. மகேஸ்வரன் (ஈசன்-கனடா, உயர்தரம் 1994ம் அணி யாழ்.இந்துக் கல்லூரி, மொரட்டுவ பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

புஷ்பலதா, மாதுமையாள் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அர்வின், அஷ்மிதா, டிலன், கவின், மொழி, ஷாரினி ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வுகள் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) எனும் முகவரியில் உள்ள மலர்ச்சாலையில் 30-06-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையும், 01-07-2024 திங்கட்கிழமை காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரையும் பார்வைக்காக வைக்கப்பட்டு, 9.00 மணி முதல் 10.30 மணி வரை கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11.00 மணியளவில் Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada) எனும் முகவரியில் உள்ள மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/06/2024 04:00)