திரு விவேகானந்தம் சின்னத்தம்பி (ஆனந்தன்)

(Drivinig Master - Toronto)

விவேகானந்தம் சின்னத்தம்பி (ஆனந்தன்)

தோற்றம்: 15 ஆகஸ்ட் 1952 - மறைவு: 06 நவம்பர் 2023

யாழ். அல்வாய் வடக்கு திருவிசீமாவைப் பிறப்பிடமாகவும், வியாபாரிமூலை குமாரவளவு, Jeddah சவுதி அரேபியா, Alta நோர்வே ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், Scarborough கனடாவை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட விவேகானந்தம் சின்னத்தம்பி அவர்கள் 06-11-2023 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, இராசம்மா தம்பதிகளின் அருமைப் புத்திரனும்,  காலஞ்சென்ற மாணிக்கம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திருப்புவனேஸ்வரி (புவனேஸ்-கனடா) அவர்களின் ஆருயிர்த் துணைவரும், 

கவிதா (கனடா), தீபா (கனடா), காண்டீபன் (கனடா), ரேகா (கனடா) ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,

ஜெயகாந்தன், சிவசங்கர், சுஜந்தி, காலஞ்சென்ற சிவசக்திவேல் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மதுரா, ஜோசுவா, சுஜித், வர்ஷா, அபிஷேக், மகரேஷ், Zion, Zayn, Zyer ஆகியோரின் அன்புப் பேரனும்,

பரமேஸ்வரி (இலங்கை), காலஞ்சென்ற சிவபாலன், சச்சிதானந்தம் (நோர்வே), காலஞ்சென்ற ஞானேஸ்வரி, ராஜேஸ்வரி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற பாலசுப்ரமணியம், விமலாதேவி, பூங்கோதை, காலஞ்சென்ற சிவபாதசுந்தரம், அமிர்தகுலபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை தமிழ் தகவல் ஊடாக உற்றார், உறவினர், நண்பரகள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.


தகவல்

குடும்பத்தினர்


பார்வைக்கு

Saturday, 11 Nov 2023  (5:00 PM - 9:00 PM)

Sunday, 12 Nov 2023 (5:00 PM - 9:00 PM)

Monday, 13 Nov 2023 (6:30 AM - 7:00 AM)

 

Chapel Ridge Funeral Home & Cremation Centre

8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada



கிரியை

Monday, 13 Nov 2023  (7:00 AM - 8:30 AM)

Chapel Ridge Funeral Home & Cremation Centre

8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada


தகனம்

Monday, 13 Nov 2023  (9:30 AM)

Forest Lawn Mausoleum & Cremation Centre

4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada




www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/11/2023 05:00)