திரு. சின்னத்தம்பி பாலசுந்தரம் (தேவன்)

(மகாராஜா மற்றும் லங்கா சிமெந்து கூட்டுதாபனத்தின் ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்)

சின்னத்தம்பி பாலசுந்தரம் (தேவன்)

தோற்றம்: 01 நவம்பர் 1944 - மறைவு: 12 அக்டோபர் 2026

யாழ். வீமன்காமம் மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், இணுவில் மற்றும் திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சின்னத்தம்பி பாலசுந்தரம் அவர்கள் 12-10-2026 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு புதல்வனும், காலஞ்சென்றவர்களான கந்தையா - பார்வதி தம்பதியினரின் மருமகனும்,

காலஞ்சென்ற பாலசுந்தரம் வசந்தமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

கிரிவரன் (பிரான்ஸ்), கமலவரன் (பிரான்ஸ்), கார்த்திகா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

துஷாரகி (கனடா), வரண்யா (பிரான்ஸ்), கிருபாகரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கனகம்மா, நவரத்தினம், நடேசபிள்ளை, கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான கண்மணி, தில்லைநாயகி, இராசதுரை, அருமைநாயகி, திருச்செல்வம் மற்றும் ஜெயராசா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யுகனிகா (கனடா), ஓவியா, நிகேஷ், அப்சரா. ஆருஜன், ஆதேவ் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-10-2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 8.30 மணியளவில் இல- 56, மணல்தரை ஒழுங்கை, கந்தர்மடம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்று, திருவுடல் மாவிட்டபுரம் தச்சன்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 75 515 4502
+94 77 763 1661

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/10/2026 00:00)