Mr. Sinnathamby Kulasuingham

(ஓய்வு பெற்ற மேலதிக காணி மாவட்டப் பதிவாளர் - பருத்தித்துறை, ஆங்கில மொழிபெயர்ப்பாளர்)

Sinnathamby Kulasuingham

Deceased: 30 March 2026

யாழ். வடமராட்சி புலவரோடை, வதிரியைப் பிறப்பிடமாகவும்,  கோவில் தோட்டம் அல்வாய் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட  திரு. சின்னத்தம்பி குலசிங்கம் அவர்கள் 30-03-2026 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - அன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சகுந்தலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

குலவதி, குலக்கண்ணன், குலதாசன் (ஓய்வு பெற்ற ஊழியர்- மாவட்ட செயலகம், கிளிநொச்சி), இராஜலட்சுமி (குலராணி) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

காலஞ்சென்ற தேவராஜா (ஓய்வு பெற்ற வரி உத்தியோகத்தர்), பாலகிருஷ்ணன் (ஓய்வு பெற்ற நில அளவையாளர்), பத்மராணி, காலஞ்சென்ற புஷ்பமலர் (முகாமைத்துவ உதவியாளர் - கமநல சேவைத் திணைக்களம், கிளிநொச்சி), காலஞ்சென்ற சச்சிதானந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரியதர்சினி (கனடா), சங்கீதா (ஆசிரியை - யாழ். வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவானந்தரூபன் (கனடா), காண்டீபன் (முகாமையாளர்- Vallibel Finance Plc, நெல்லியடி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லஷ்மிகா, லக்ஷிகன், லக் ஷிதா, கிரிஷிகா, கிருஷ்ணிதா, கிருஷன்யா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-04-2026 வியாழக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் கோவில் தோட்டம், அல்வாய் வடக்கிலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சுப்பர் மடம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/04/2026 00:00)