திரு. சின்னத்தம்பி குலசிங்கம்
(ஓய்வு பெற்ற மேலதிக காணி மாவட்டப் பதிவாளர் - பருத்தித்துறை, ஆங்கில மொழிபெயர்ப்பாளர்)
மறைவு: 30 மார்ச் 2026
யாழ். வடமராட்சி புலவரோடை, வதிரியைப் பிறப்பிடமாகவும், கோவில் தோட்டம் அல்வாய் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி குலசிங்கம் அவர்கள் 30-03-2026 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - அன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சகுந்தலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
குலவதி, குலக்கண்ணன், குலதாசன் (ஓய்வு பெற்ற ஊழியர்- மாவட்ட செயலகம், கிளிநொச்சி), இராஜலட்சுமி (குலராணி) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
காலஞ்சென்ற தேவராஜா (ஓய்வு பெற்ற வரி உத்தியோகத்தர்), பாலகிருஷ்ணன் (ஓய்வு பெற்ற நில அளவையாளர்), பத்மராணி, காலஞ்சென்ற புஷ்பமலர் (முகாமைத்துவ உதவியாளர் - கமநல சேவைத் திணைக்களம், கிளிநொச்சி), காலஞ்சென்ற சச்சிதானந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரியதர்சினி (கனடா), சங்கீதா (ஆசிரியை - யாழ். வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவானந்தரூபன் (கனடா), காண்டீபன் (முகாமையாளர்- Vallibel Finance Plc, நெல்லியடி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லஷ்மிகா, லக்ஷிகன், லக் ஷிதா, கிரிஷிகா, கிருஷ்ணிதா, கிருஷன்யா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-04-2026 வியாழக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் கோவில் தோட்டம், அல்வாய் வடக்கிலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சுப்பர் மடம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
