திரு. சின்னத்தம்பி இராசகோபாலன்

(இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகத்தர்)

சின்னத்தம்பி இராசகோபாலன்

தோற்றம்: 18 மே 1958 - மறைவு: 23 அக்டோபர் 2024

யாழ். கரவெட்டி கிழக்கு கிழவிதோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி இராசகோபாலன் அவர்கள் 23-10-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி-இராசம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரரும்,

காலஞ்சென்ற ஐயாத்துரை-லஷ்மி (சின்னமணி) தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சிவநேசம் அவர்களின் அன்புக் கணவரும்,

கோகுலராம் அவர்களின் அன்புத் தந்தையும்,

இராசநாயகம் (ஓய்வு பெற்ற அதிபர்), இராசமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற ஜெயராசா அவர்களின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற நடராசா (ஓய்வுநிலை அதிபர்), செல்வராசா (ஓய்வு பெற்ற ஆங்கில உதவிக் கல்விப் பணிப்பாளர்), தங்கராசா (ஓய்வு பெற்ற பிரதேச சபை உத்தியோகத்தர்), சிவராசா (கனடா), தவராசா (இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தேவா (இலண்டன்), மோகன்ராஜ் (இலங்கை), நந்தா (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கிரிசாந்தி (இலங்கை), ஜெயப்பிரகாஷ் (இலண்டன்), மோர்சிபவன் (இலங்கை), மேனகா (இலண்டன்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் கிழவிதோட்டத்தில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் சோனப்பு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/10/2024 04:00)