Mr. Sinnathamby Gajendra

Sinnathamby Gajendra

Date of Birth: 22 February 1951 - Deceased: 09 December 2024

யாழ். உடுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்ரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி கஜேந்திரா அவர்கள் 09-12-2024 திங்கட்கிழமை அன்று  அவுஸ்ரேலியாவில் இறைவனடி சேர்ந்தார் .

அன்னார், சின்னத்தம்பி- லீலாவதி தம்பதியினரின் அன்பு மகனும்,

யோகலஷ்மி அவர்களின் பாசமிகு கணவரும்,

லக்ஷ்மியின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான அரியம்மா, மகேஸ்வரி மற்றும் மகேந்திரா, காலஞ்சென்ற பாலேந்திரா, தெய்வேந்திரா, யோகேஸ்வரி, காலஞ்சென்ற பத்மாவதி, புஸ்பவதி, கமலாவதி, காலஞ்சென்ற ராஜேந்திரா, புவனேந்திரா, சரஸ்வதி, திலகவதி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

மாறன் அவர்களின் அன்பு  மாமனாரும்,

Krishan, Kiara ஆகியோரின்  பாசமிகு பேரனும் ஆவார்.

இவர் தெரணியகலையில் பிறந்து ஸ்கந்தவரோதயா கல்லூரியில் கல்வி கற்று Hotel Intercontinental(Colombo), Royal Airforce(Oman), Huntingdale Golf Club, Florentino(Melbourne) ஆகிய இடங்களில் பணி புரிந்தார்.

மெல்பேர்னில் வாழ்ந்த காலத்தில் தாயக விடுதலைக்காகதன்னை பல அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றினார். குறிப்பாக தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பிராந்தியபொறுப்பாளராகவும், திராவிட கலாச்சார கழகத்தின் முகாமையாளராகவும் அர்ப்பணிப்புடன் பல ஆண்டுகள் செயல்பட்டார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நடைபெரும் இடம்
 
    SUNDAY, 15TH OF DECEMBER 2024
 
      1:30 PM TO 3:00 PM
 
       STRATUS CHAPEL
   BUNURONG MEMORIAL PARK
790 FRANKSTON - DANDENONG ROAD
  DANDENONG SOUTH, VICTORIA


  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/12/2024 21:28)