Mr. Sinnathamby Selvaratnam
Date of Birth: 23 March 1949 - Deceased: 09 January 2025
யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், Saarbrücken - ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி செல்வரட்ணம் அவர்கள் 09-01-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி - ஆச்சிக்குட்டி தம்பதியினரின் பாசமிகு புதல்வரும்,
காலஞ்சென்ற நல்லதம்பி - ஆச்சிப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும்,
தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற நாகலிங்கம், செல்லத்துரை, ராசதுரை, ரத்தினம், பூமலர், பரமேஸ்வரி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
துரைசிங்கம் (பிரான்ஸ்), செல்வராசா, பரமேஸ்வரி (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சஞ்சிஸ்ரேலா (ஜேர்மனி), சஞ்சீவா (ஜேர்மனி), சசீந்திரன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுவில்சன் ஜோர்ச்கிங் அவர்களின் அன்பு மாமனாரும்,
கிவின்சன், கரிசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-01-2025 புதன்கிழமை அன்று மதியம் 1:00 - 2:00 மணி வரை Bestattungen Steimer & Grub GmbH (St.Ingberter Str. 18-20, 66440 Blieskastel, Germany) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
