Mr. Sinnathamby Shanmuhathas
(ஓய்வு பெற்ற பல நோக்கு கூட்டுறவுச் சங்க ஊழியர் - தெல்லிப்பளை)
Date of Birth: 24 April 1955 - Deceased: 25 September 2025
யாழ். காங்கேசந்துறை, கல்லூரி வீதியை பிறப்பிடமாகவும், நல்லூர் நிக்கலஸ் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி சண்முகதாஸ் அவர்கள் 25-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான ராசலிங்கம் - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
லிங்கேந்திரராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
தட்சனன், சிவதாஸ், பவிதா, றஜிதா, றஜிதாஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
புஸ்பராணி, காலஞ்சென்ற சஞ்சீவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தர்சிகா, தமிழினி, தமிழ்க்கதிர், ஆதவன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
மங்கையர்கரசி, அற்புதராணி, காலஞ்சென்ற மனோகரதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-09-2025 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் உரும்பிராய் வேம்பன் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!
www.tamilthakaval.org
