திரு. சின்னத்தமபி சின்னத்துரை (ஐயாத்தம்பி)

சின்னத்தமபி சின்னத்துரை (ஐயாத்தம்பி)

தோற்றம்: 20 ஆகஸ்ட் 1946 - மறைவு: 30 அக்டோபர் 2024

யாழ். மந்துவில்  வடக்கு கொடிகாமத்தினைப் பிறப்பிடமாகவும், கொயிலாமனை கொடிகாமத்தினை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தமபி சின்னத்துரை அவர்கள் 30-10-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி-தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், சின்னத்தம்பி-பகீரதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் பாசமிகு கணவரும்,

கதிர்காமநாதன் (ஆசிரியர்-இடைக்குறிச்சி ஸ்ரீசுப்பிரமணி வித்தியாலயம்), கோகுலநாதன் (கனடா), கோகுலமதி (ஜேர்மனி), கோகுலவதனி, கோகுலவேணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கனகேஸ்வரி (ஆசிரியை-யாழ். குடமியன் அ.த.க பாடசாலை), வனஜா (கனடா), குபேந்திரன் (ஜேர்மனி), சிவறதீஸ் (அதிபர்- மயிலிட்டி  ஞானோதநா வித்தியாலயம்), கஜேந்திரன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கஸ்தூரிகா, கனுசிகன், யஸ்மிகா, யஸ்னுத், யதுமிகன், கிருஸ்டிகன், மதுக்ஷா, அபிசாயினி, சங்கீத் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், கந்தையா, சுப்பிரமணியம் மற்றும் அன்னப்பிள்ளை, கனகம்மா, இராசம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள்  03-11-2024  ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில்  நடைபெற்று. புகழுடல் சோனம்புலவு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/11/2024 21:46)