Mr Sinnathamby sittampalam
(யாழ் மானிப்பாய் இந்துக் கல்லூரியின் ஆசிரியர்.)
Date of Birth: 06 February 1934 - Deceased: 11 June 2026
தமிழ்த் தேசியத்தை ஆழமாகவும், தூய்மையாகவும் உணர்வுபூர்வமாகவும் நேசித்த சமூகத் தலைவர் திரு சின்னத்தம்பி சிற்றம்பலம் மாஸ்ரர் அவர்கள் யூன் 11,2026ம் திகதி வியாழக்கிழமை ரொறன்ரோ ஸ்காபரோவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இறைபதம் அடைந்தார்.தமிழர் சமூகத்தில் "மாஸ்ரர்" என அன்போடு அழைக்கப்பட்ட அவர் தாயகத்திற்கும், தமிழ்த் தேசியத்திற்கும் அர்பணித்த வாழ்வின் ஒளிக்கோப்பையாக விளங்கினார்.
யாழ் நெல்லியடி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சின்னத்தம்பி சிற்றம்பலம் அவர்கள் 11-06-2026ம் திகதி வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
யாழ் மானிப்பாய் இந்துக் கல்லூரியின் ஆசிரியராக பணிபுரிந்த சின்னத்தம்பி சிற்றம்பலம் ஆசிரியர் அவர்கள் எண்பதுகளின் இறுதியில் கனடா வந்திருந்தாலும் தாயகத்தின் மீதான அவரது பற்றும் பாசமும் ஒருபோதும் குறையிவில்லை.
தாயகச் சிநதனையுடன் தேசியப் போராட்டத்தின் மீதான ஆழ்ந்த அக்கறையுடனும், வாழ்ந்த அவர் தமிழ்த் தேசியத்தின் வரலாறு, தியாகம், நோக்கம் ஆகியவற்றைப் பற்றியே எப்போதும் உரையாடுவார்.
சிறந்த பேச்சாளராகவும், நேர்மையான சமூகப் பணியாளராகவும், அவர் பெற்றிருந்த மரியாதை, தமிழர் சமூகத்தில் அவருக்கு உயர்ந்த பொறுப்புகளை தானாகவே தேடித்தந்தது.
தமிழ் கூட்டுறவு இல்லத்தில் ஒருங்கிணைப்பாளர், தமிழீழச் சங்கத்தின் தலைவர், உலகத்தமிழர் இயக்கத்தின் தலைவர் உள்ளிட்ட பல்வேறு சமூகஅமைபபுகளில் அவர் ஏற்ற பொறுப்புகள், அவரது அர்ப்பணிப்பையும் அயராத உழைப்பையும், வெளிப்படுத்துகின்றன. எந்தப் பொறுப்பையும், அவர் மனதார ஏற்று சமூக நலனுக்காக முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டார்.
www.tamilthakaval.org
