Mr Sinnathamby Sivayoganathan(Sleas, Master)
(Retired Physics Teacher,Jaffna Hindu College)
Date of Birth: 26 March 1931 - Deceased: 29 March 2020
யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், மல்லாகம், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிவயோகநாதன் அவர்கள் 29-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி சின்னத்தம்பி மற்றும் அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. சின்னையா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுசிலாதேவி(இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
சிவகுமாரன், சுகுமாரன், சூரியகுமாரன், சிறிகுமாரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சிவராஜ், புஷ்பமணி சுப்பிரமணியம், திருப்பதி பரமநாதன், சோதிநாதன், மகேந்திரநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கலாதேவி, லலிதா, வானதி, சிவானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிரேயன், சதுர்சி, சுஜிதன், சருக்சி, ஓவியா, அமுதவாணி ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பொரளை இந்து மயானத்தில் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
