Mr. Sinnathurai Ariyaratnam
Date of Birth: 01 February 1946 - Deceased: 25 December 2024
யாழ். கொல்லங்கலட்டி மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டி, கந்தரோடை Scarborough - கனடா ஆகிய வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை அரியரட்ணம் அவர்கள் 25-12-2024 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்க்ளான சின்னத்துரை - ஆச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வினாயகமூர்த்தி - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சறோஜினிதேவி (சறோ- முன்னாள் பிரதம தாதி - யாழ். போதனா வைத்தியசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,
பிரபாஹரி (பிரபா-கனடா), காகுஸ்தன் (பாபு-கனடா), கோகுலன்(கோபு-கனடா), முகுந்தன் (கனடா), தாமரைச்செல்வன் (செல்வன் - கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மணீகரன் (அரன்-கனடா), ஷொபிசான் (சோபி-கனடா), ரமணி (கனடா), கம்சவதனி (கம்ஷா-கனடா), ஜெனித்தா (ஜெனி-கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிரா, அர்ஜீன், மரீனா, நாதியா, ஹரிதாஸ், அனந்திக்கா, அல்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
அன்னலஷ்மி (இலங்கை), காலஞ்சென்ற விஜயரட்ணம், ராஜநாயகம் (இலண்டன்), ஸ்ரீலஷ்மி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை, தவமணி மற்றும் பரமேஸ்வரி, ராகவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சண்முகநாதன், காலஞ்சென்ற மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-12-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 - 9:00 மணி வரையும், 30-12-2024 திங்கட்கிழமை காலை 8:00 - 9:00 மணி வரையும் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
