திருமதி. சின்னத்துரை கமலேஸ்வரி

(ஓய்வுபெற்ற ஆசிரியை - யா/இராமநாதன் கல்லூரி)

சின்னத்துரை கமலேஸ்வரி

தோற்றம்: 27 ஜூலை 1942 - மறைவு: 30 டிசம்பர் 2024

யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், இல-42, லோறன்ஸ் வீதி, பம்பலப்பிட்டி, கொழும்பு - 04 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சின்னத்துரை கமலேஸ்வரி அவர்கள் 30-12-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிஜயா-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சொக்கலிங்கம்-ஆச்சிமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்துரை (ஓய்வுபெற்ற வடக்கு - கிழக்கு பிராந்திய நிர்வாக அதிகாரி - தபால் திணைக்களம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

சுசந்தன் (மிருக வைத்தியர்), காலஞ்சென்ற சிவஜெயசுதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுகந்தியின் மாமியாரும்,

ரிஷியின் அன்பு அப்பம்மாவும்,

காலஞ்சென்றவர்களான கமலேஸ்வரன், நகுலேஸ்வரன், பரமேஸ்வரன், ரவீந்திரன் மற்றும் கமலாகரன், ரஜனி, மனோகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கோபாலசிங்கம், கனகரத்தினம், தியாகராஜா மற்றும் இராசரத்தினம், மகாலக்‌ஷ்மி, விஜயலக்‌ஷ்மி, சிவசுப்பிரமணியம், ஜெஸ்வரன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-01-2025 புதன்கிழமை அன்று காலை 8.30 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11.30 மணியளவில் புகழுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/01/2025 05:00)