Mr. Sinnathurai Mahadevan
(ஓய்வுபெற்ற தலைமை எழுத்தர் - கிராம சபை)
Date of Birth: 12 December 1939 - Deceased: 13 March 2026
யாழ். கொக்குவிலை பிறப்பிடமாகவும், தாவடி கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சின்னத்துரை மகாதேவன் அவர்கள் 13-03-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை - சுபத்திரை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராமலிங்கம் - நல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
விஜயலட்சுமி அவர்களின் அன்பு கணவரும்,
பூபாலசிங்கம் (கனடா), ஜெயவீரசிங்கம் (கனடா), காலஞ்சென்ற நவரட்ணசிங்கம், சுந்தரலிங்கம் (கனடா) ஆகியோரின் அன்பு சகோதரரும்,
ஜெயராணி, சுகுணா, சரோ (கனடா) ஆகியோரின் மைத்துனரும்,
முரளி (ஜேர்மனி), முகுந்தன் (Deva - Liverpool இலண்டன்), காலஞ்சென்ற சியாமளா (கனடா), வேணு (இலண்டன்) ஆகியோரின் அன்பு தகப்பனாரும்,
துர்க்கா, நதி, ஜெபரஞ்சன், இந்துயா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கீதன் (ஜேர்மனி), அலீஷியா & அலீனியா (இலண்டன்), ஆருஷன் & அபீஷன் (கனடா), அஷ்வின், அபிநயா & ஆரன் (இலண்டன்) ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் காலை 8.00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நண்பகல் 12.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
