திரு. சின்னத்துரை முத்துலிங்கம்
தோற்றம்: 08 பெப்ரவரி 1938 - மறைவு: 24 செப்டம்பர் 2022
யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு மஞ்சவனப்பதி வீதி மற்றும் கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை முத்துலிங்கம் அவர்கள் 24-09-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
சகாதேவன் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற அரியமலர் அவர்களின் அன்பு மைத்துனரும்,
சற்குணவதி அவர்களின் அன்புக் கணவரும்,
வாசுகி, துஷிதா (பபி), தயானந்தன் (தயா), தனுஷா (சூட்டி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவகுமார் (சிவா), வத்சலா, லோகதாஸ் (லோகா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிதுஷா, மதுஷா, திபீஷா, ரொய்ஷன், ரோஷ்னி, ரக்ஷன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
