திரு. சின்னத்துரை நாகேந்திரம்
தோற்றம்: 18 பெப்ரவரி 1952 - மறைவு: 02 நவம்பர் 2024
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி காலணை, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை நாகேந்திரம் அவர்கள் 02-11-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
இராசையா-சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
தங்கலட்சுமி (பெரியபிள்ளை) அவர்களின் அன்புக் கணவரும்,
ரவிக்குமார், ரமேஸ்குமார், சதீஸ்குமார், குகானந்தா, ராகவன், யசோதா, ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கனகரத்தினம், காலஞ்சென்ற பரிமளம், இராஜரட்ணம் செல்வரத்தினம், ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம், செல்வநாயகம் மற்றும் சரஸ்வதி, இராஜேஸ்வரி, செல்வராணி, செல்வமலர், இந்திராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சங்கீதா, பாசினி, கிறிஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஷானிகா, யாவின், டாவின், நிறைவின், ரவிதாயிணி, சேயோன், சேரன், விஷ்ணு, கிருஷ்ணா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
இளையப்பு ஐயாத்துரை, இளையப்பு கந்தையா, இளையப்பு சின்னம்மா, இளையப்பு தங்கம்மா, இளையப்பு அப்பாக்குட்டி ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06-11-2024 புதன்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 07-11-2024 வியாழக்கிழமை முற்பகல் 10:30 - 11:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து மதியம் 1:30 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
