திரு சின்னத்துரை நடராசா
மறைவு: 09 நவம்பர் 2019
மட்டுவில் தெற்கு சாவகச்சேரியைப் பிறப் பிடமாகவும் மட்டுவில் நுணாவில் எல்லை வீதி, நுணாவில் மேற்கு சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை நடராசா நேற்று (09.11.2012) சனிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்துரை - வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை - சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராஜேஸ்வரியின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான அன்னபூரணம், விஸ்வலிங்கம் மற்றும் பாக்கியம் ஆகியோரின் அன்பு சகோதரரும்,
இந்திரகுமார், நளாயினி, ரோகினி (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தவறஞ்சன்ன், தவராசா(ஜேர்மனி), அனுலதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
D.கிசன் (அயர்லாந்து), கார்த்திக் (இந்தியா), Dr.சபிதா, லக்ஷன் (பணியாளர் - மகேஸ் அன் சன்ஸ் - சாவகச்சேரி), கரிகாலன் ( Engineer ), ஜேர்மனியை வசிப்பிடமாகக் கொண்ட ஆர்த்திகா, பிரித்திகா, சங்கித் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (10.11 2019) ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக முற்பகல் 11.00 மணியளவில் குச்சப்பிட்டி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
மட்டுவில் நுணாவில் எல்லைவீதி,
நுணாவில் மேற்கு, சாவகச்சேரி.
தகவல்: குடும்பத்தினர்
+94 75 0658164
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/11/2019 05:04)
