திரு. சின்னத்துரை பகீரதன்
மறைவு: 11 ஏப்ரல் 2026
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை பகீரதன் அவர்கள் 04-04-2026 சனிக்கிழமை அன்று நீர்வேலியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும், கோபாலன் - காலஞ்சென்ற சறோஜினிதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
பொற்கலா (ஜேர்மனி) அவர்களின் அன்புக் கணவரும்,
லபிஷன் (ஜேர்மனி), தஷிகா (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பகீரதி (ஆசிரியை - யாழ். கோப்பாய் சரவணபவானந்த வித்தியாலயம்), காலஞ்சென்ற முரளிதரன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
கங்காதரன் (ஆசிரியர் - யாழ். செட்டித்தெரு மெ.மி.த.க பாடசாலை) அவர்களின் அன்பு மைத்துனரும்,
சங்கீர்த்தனன், பானுஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05.04.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் நீர்வேலி மத்தியிலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
