திரு. Sinnathurai Sivakumaran
(ஓய்வு பெற்ற பொருளியல் ஆசிரியர்- கொக்குவில் இந்து கல்லூரி)
Deceased: 28 July 2024
யாழ். சுன்னாகம் பருத்திக்கலட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை சிவகுமாரன் அவர்கள் 28-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை-தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற ஐயம்பிள்ளை-சின்னதங்கம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சுகுணம் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், மகேஸ்வரி, புவனேஸ்வரி மற்றும் கோபாலகிருஷ்ணன், நடராஜா, விக்கினேஸ்வரன், ராசமணி ஜெயசிறிபவன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சிவசோதி, காலஞ்சென்ற ஜெகசோதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற யோகலிங்கம், செல்வவிஜயசெகரன் ஆகியோரின் அன்பு சகலனும்,
ஜனகாவின் சிறிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 29-07-2024ம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 1:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனக்கிரியைகளுக்காக சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:-
பருத்திக்கலட்டி,
சுன்னாகம், யாழ்ப்பாணம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
