திரு. சின்னத்துரை தயாபரன்

(பொறியியலாளர்)

சின்னத்துரை தயாபரன்

தோற்றம்: 18 டிசம்பர் 1954 - மறைவு: 19 மே 2025

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், இல-68, மருதடி வீதி, நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை தயாபரன் அவர்கள் 19-05-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை - மங்களேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை - பாலாம்பிகை தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

சகிதேவி (வைத்தியர்) அவர்களின் அன்புக் கணவரும்,

தீனதயாள் (பொறியியலாளர் - கனடா), திவாகர் (சட்டத்தரணி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கஜந்தினி, அன்ரியா டினோஜா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பிரபாகரனின் (வைத்தியர்)  அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற பாலகுமரனின் மைத்துனரும்,

சாத்மிகா, ஆருக்ஷி, அனுருக்ஷி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-05-2025 வியாழக்கிழமை மதியம் 1:30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/05/2025 04:00)