திரு. சின்னத்துரை தியாகலிங்கம்

(பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினரும்,சமாதான நீதவானும்,வடமாராட்சி கிழக்கு லயன்ஸ் கழக முன்னாள் தலைவரும்,இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மருதங்கேணி உறுப்பினர்)

சின்னத்துரை தியாகலிங்கம்

தோற்றம்: 25 நவம்பர் 1947 - மறைவு: 13 நவம்பர் 2022

யாழ் குடத்தனை வடக்கு, குடத்தனை பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினரும், சமாதான நீதவானும், வடமாராட்சி கிழக்கு லயன்ஸ் கழக முன்னாள் தலைவரும், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மருதங்கேணி உறுப்பினருமான திரு சின்னத்துரை தியாகலிங்கம் அவர்கள் 13-11-2022ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்துரை அகவதி தம்பதியரின் மூத்த மகனும்,
 
காலஞ்சென்றவர்களான துரையப்பா  பூரணம் தம்பதியரின் அன்பு மருமகனும்,
 
ஞானேஸ்வரியின் பாசமிகு கணவரும்,
 
தியாகரத்தினம் (ஜேர்மனி),தியாகமணி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
 
ஜாமினி (கனடா), குமணன் (கனடா), ரமணன் (பிரான்ஸ்)  ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற பஞ்சலிங்கம் மற்றும் தவநாயகி(ஜேர்மனி), ஞானதுரை(அமெரிக்கா), காலஞ்சென்ற ஞானதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
சாந்தினி (அமெரிக்கா), சந்திரசேகரம் (திருகோணமலை) ஆகியோரின் அன்புச் சகலனும்,
 
தினேஸ்கரன்(கனடா), வரதா(கனடா), லிங்கேஸ்வரன்(சுவிஸ்), ஜெயக்குமாரி(லண்டன்),
அன்பழகன்(ஜேர்மனி), கலைவாணி(சுவீடன்), சங்கீதா, ராதிகா(கனடா), ஷாம்(அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
சரிதா(ஜேர்மனி), யாழினி(ஜேர்மனி), ஜதீஸ்வரன்(ஜேர்மனி), தாரணி(சுவிஸ்), தனுஷா(ஜேர்மனி),
ஆகியோரின் பெரிய தந்தையும்,
 
பிரதீப்(லண்டன்), நிமலன்(அமெரிக்கா) ஆகியோரின் சிறிய தந்தையும்,
 
ஷோன்(கனடா), நஜோமி(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் நாளை 17-11-2022ம் திகதி வியாழக்கிழமை மு.ப. 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக குடத்தனை வடக்கு இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
 
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
வீட்டு முகவரி:-
 
குடத்தனை வடக்கு,குடத்தனை
பருத்தித்துறை,யாழ்ப்பாணம்
 
 
தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/11/2022 00:46)