திருமதி. பருவதபத்தினி (பொட்டுமாமி) சிந்துராஜா
தோற்றம்: 15 ஜூன் 1936 - மறைவு: 13 பெப்ரவரி 2022
யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, பிரான்ஸ் Drancy ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிந்துராஜா பருவதபத்தினி அவர்கள் 13-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற விசுவலிங்கம், வேலாசிப்பிள்ளை (பெரிய புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய ஸ்தாபகர், ஸ்ரீ சித்தி விநாயக கனிஷ்ட மகாவித்தியாலயத்தின் ஸ்தாபகர்) தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும்,
காலஞ்சென்றவர்களான இராசையா நல்லம்மா தம்பதிகளின் மூத்த மருமகளும்,காலஞ்சென்ற சிந்துராஜா (பிரபல கொழும்பு வர்த்தகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
ரதீஸ் (பிரான்ஸ்), ரமேஸ் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சிவகாமிப்பிள்ளை (மலேசியா), கார்த்திகேசு (பால்சபையின் மேலதிகாரி-யாழ்ப்பாணம்), கனகசபாபதி (கூட்டுறவு பரிசோதகர்- யாழ்ப்பாணம்), சோமஸ்கந்தர் (இறுப்பிட்டி புங்குடுதீவு உபதபால் அதிபர்), முருகேசு உடையர் சிவயோகம்மா, நமசிவாயம் மங்கையற்கரசி (திடீர் மரண விசாரணை அதிகாரி), சிங்கராஜா மீனாட்சி(ஆசிரியை), கனகரட்ணம்(மருத்துவர்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
டொறின் ஜீஜின் (Eugene), பிறேமிளா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான விவேகானந்தன், சிவானந்தன், ரவீந்திரன், ரமானந்தன் (இலங்கை), சுத்தானந்தன் (கனடா), ஜெயகௌரி (இலங்கை) ஆகியோரின் மைத்துனியும்,
சிந்துஜா, அர்த்னா, ஜொனத்தன், தியானா, திஸானா, எலெனா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
